Vikatan

அண்ணாமலை

இன்று காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் எனத் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க

00:00
00:00

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் அண்ணாமலை. அந்தப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, பா.ஜ.க-வில் இணைந்தார். அப்போது,”நான் ஒரு ஏழை விவசாயி மகன். என்னிடம் ஆடுகள், மாடுகள் மட்டும்தான் இருக்கிறது” எனத் தன்னை பற்றி எளிமையாக வெளிப்படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவராகவும் பொறுப்பேற்றார். அப்போது முதல் தொடர்ந்து தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து, மாநில அரசுடன் அவ்வப்போது மோதல் போக்கையும் கடைப்பிடித்து வருகிறார்.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்த நிலையில், அவரது கையில் வெளிநாட்டு வாட்ச்  கட்டிருப்பதாகவும், அது பல லட்சம் மதிப்பு என்றும், ஏழை விவசாயியின் மகனுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது என்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “நான் கட்டிருப்பது ரஃபேல்  விமானத்தின் உதிரிப்பாகங்களால் தயாரான ரஃபேல் வாட்ச். இதுபோல் உலகில் 500 வாட்ச்கள் மட்டுமே இருக்கும்.

அதில் ஒன்றை நான் வாங்கி அணிந்திருக்கிறேன். நான் இந்தியன், என் மூச்சிருக்கும் வரை இந்த வாட்ச்சை  கட்டியிருப்பேன்” என்று தெரிவித்தர். அதைத் தொடர்ந்து, ‘ இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட வேண்டும்’ என தி.மு.க மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டிருந்தார். அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ட்விட்டரில் வார்த்தைப்போர் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களிலும்  வாட்ச் பில்  தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

அப்போதும் அண்ணாமலை, “என்னிடம் வாட்ச் பில் இருக்கிறது” எனத் தெரிவித்தார். ஆனால், பில்லை வெளியிடவில்லை. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஒரு செய்தியாளர் சந்திப்பில், “ஏப்ரல் 1-ம் தேதி வாட்ச் பில்லை வெளியிடுவேன். ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், எனது சொத்து தகவல்களையும் வெளியிடுவேன்” என்பதாக அறிவித்தார். ஆனால், கடந்த ஒன்றாம் தேதி அண்ணாமலை அந்த ரபேல் வாட்ச் பில்லை வெளியிடவில்லை. ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க-வின் ஊழல் குறித்து வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ச் பில் குறித்தும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்றைய தினம் அண்ணாமலை, “நாளை காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, முன்னால் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை,  சபரீசன்,செல்வி, மு.க முத்து, மு.க அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் படங்கள் இருக்கக்கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில், இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தலைவர அண்ணாமலை,” கவிஞர் கண்ணதாசன் தனது வனவாசம் என்ற புத்தகத்தில் கலைஞர் கருணாநிதியும், கண்ணதாசனும் ரயிலில் வந்தது தொடர்பாக எழுதியிருக்கிறார். அதில் பழம் விற்கும் நபர் கூடையை வைத்துவிட்டு கழிவறை சென்ற போது கலைஞர் பழத்தை திருடலாமா எனக் கேட்டார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது முதல் திருடத் தொடங்கினார்கள். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக இன்னும் திருடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னை ஆரம்பித்தது என் ரஃபேல் வாட்சின் மூலமாகதான்.

நான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து வாங்கினேன். அதற்கான பில் இதோ…” என பில்லைக் காட்டினார். மேலும் தொடர்ந்தவர், “எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் இன்று இணையதளத்தில் வெளியிடுகிறேன். ஆனால் நேற்றே ஒரு போலி பில்லை பதிவிட்டது திமுக ஐடி விங்க். அதையும் நம்பி பரப்பி வருகிறார்கள். தற்போது நான் ஒரு வீடியோவை வெளியிடுகிறேன். அதில் திமுக கட்சியை சார்ந்தவர்களின் சொத்து விவரங்கள் இருக்கிறது.

கலாநிதி மாறன் ரூ.12,450 கோடி; உதயநிதி..?! - அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் | முழு விவரம்

அதை நன்கு பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து வாருங்கள். அதற்காக ஒருவாரம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு 20 அல்லது 21-ம் தேதிகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். அப்போது உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்” எனத் தெரிவித்து வீடியோவை வெளியிட்டார். சுமார் 15 நிமிடங்கள் ஓடிய வீடியோவில் பல திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் காண்பிக்கப்பட்டது.

அதில், ஜெகத்ரட்சகன் ரூ.50,219 கோடி, எ.வ வேலு ரூ.5,442 கோடி, கே.என் நேருவிடம் ரூ.2,495 கோடி, கனிமொழியிடம் ரூ. 830 கோடி, கலாநிதி மாறனிடம் ரூ.12,450 கோடி, கதிர் ஆனந்த்திடம் ரூ.579 கோடி, கலாநிதி வீராசாமியிடம் ரூ.2,923 கோடி, உதயநிதியிடம் ரூ.2,039 கோடி, சபரீசன் ரூ.902 கோடி, பொன்முடி ரூ.581 கோடி, அன்பில் மகேஷிடம் ரூ.1023 கோடி என காட்டப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “இந்த வீடியோ மூலம் திமுக தலைவர்களிடம் 4 கேள்விகளை வைக்கிறேன். உதயநிதி ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த தொழிலும் இல்லாத நிலையில் ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் 2008-ல் ஆரம்பிக்கப்படுகிறது. 2008 – 2011 வரை ரூ.300 கோடிக்கு படம் எடுத்திருக்கிறார். அதில் நிறைய படங்கள் தோல்வியடைந்தது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் யார்? அதை உதயநிதி ஸ்டாலின் வெளியிட வேண்டும். தற்போது அந்த நிறுவனத்தில் மதிப்பு ரூ. 2010 கோடி.

கலாநிதி மாறன் ரூ.12,450 கோடி; உதயநிதி..?! - அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் | முழு விவரம்

இரண்டாவதாக முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன்…. இவர் லண்டனில் இருக்கும் ‘வெஸ்ட் பாங்க்’ எனும் மணி லாண்டரிங் பேங்க் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் இரண்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார். இது லஞ்சம் வாங்குவதை விட பெரும் குற்றம். இதற்கு முதல்வரும், அவரது மருமகன் சபரீசனும் பதில் சொல்ல வேண்டும். முதல்வர் துபாய் சென்ற போது பல்வேறு கையெழுத்துகளை போட்டார். அதில் ஒன்று நோபல் ஸ்டீல் எனும் நிறுவனம்.

இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 1000 கோடியில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், இந்த நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினும், 2016-ம் ஆண்டு அமைச்சர் அன்பில் மகேஷ்-ம் இயக்குநராக இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். இது எப்படி? இதன் மர்மத்தை விளக்க வேண்டும். 2006-2011 வரை திமுக ஆட்சியில் இருக்கும் போது சென்னை மெட்ரோ முதல் கட்ட பணிக்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி என முடிவு செய்யப்பட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

இதற்காக உடனடியாக டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டர் ஒப்பந்தம் ஆல்ஸ்டாம் நிறுவனத்துக்கு செல்ல உதவியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு, தேர்தல் நிதியாக சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது. இதை நேரடியாகவே குற்றம்சாட்டுகிறோம். இதை நேரடியாக சிபிஐ-க்கு நானே புகார் அளிக்கப்போகிறேன். அழுக்குகளின் மொத்த வடிவம் தி.மு.க. மதன் ரவிச்சந்திரன் போன்றவர்களை இறக்கிவிட்டு ஸ்டிங் ஆபரேஷன் செய்தார் உதயநிதி ஸ்டாலின். சுதந்திரம் பெற்றதற்கு பிறகு ஒரு அரசியல்வதி தனது 10 ஆண்டுகால வரவு செலவு கணக்குகளை வெளியிட்டிருப்பாரா? நான் வெளியிட்டிருக்கிறேன்.

அண்ணாமலை

அண்ணாமலை

இது பெருமைக்காக சொல்லவில்லை. திமுக-வை எதிர்க்க எனக்கு வேறு வழியில்லை. அதனால் யாருக்கும் பயந்தோ, பணிந்தோ பதவிக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது ஊழலுக்கு எதிரான போர். இந்த வெளிப்படைதான் பிரதமர் மோடி விரும்பக் கூடிய ஆட்சி. இலங்கை விவகாரம் முதல் ஹைட்ரோ கார்பன், நீட் வரை அனைத்து பிரச்னைக்கும் காரணம் திமுக தான் அனைத்து பிரச்னையையும் தீர்ப்பது பா.ஜ.க தான்.

எனவே தமிழ்நாடு மக்களுக்கு… ‘என் மண் என் மக்கள்” எனும் எனது பாதயாத்திரை ஊழலை எதிர்க்கதான். அதனால் ஜூன் முதல் வாரம் தொடங்கும் எனது நடைபயணத்தில் பங்குபெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஊழலை எதிர்க்க சபதமேற்று வாருங்கள். என்னுடன் இருப்பவர்களை எல்லாம் கைது செய்தாலும் நான் அடங்கப்போவதில்லை. என்ன நடந்தாலும் எனது குரலை அடக்க முடியாது. அது இன்னும் பலமாக இருக்கும்.” என்றார்.

Also Read

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; கைதுசெய்யப்பட்ட அண்ணாமலை `வார் ரூம்' நிர்வாகியின் பின்னணி?

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; கைதுசெய்யப்பட்ட அண்ணாமலை `வார் ரூம்’ நிர்வாகியின் பின்னணி?

தொடர்ந்து பேசியவர், “பிரதமர் சென்னை வரும் போது, நான் டெல்லியில் இருந்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். பிரதமர் தான் என்ன டெல்லியில் இருந்து கர்நாடகா தேர்தல் பணிகளை கவனிக்க சொன்னார். அதனால் தான் வரவில்லை. 2024 தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட அத்தனை கட்சியின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக-வினரின் ஊழல் பட்டியலும் வெயிடப்படும். ஊழலை எதிர்க்க நினைத்தான் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும்.

கலாநிதி மாறன் ரூ.12,450 கோடி; உதயநிதி..?! - அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் | முழு விவரம்

நான் தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை இப்படித்தான் செயல்படுவேன். என்னை மாற்ற வேண்டும் என்றால் டெல்லிக்கு சென்று முறையிடுங்கள். யார் தயவிலும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை” என்றார்.”

தொடர்ந்து முழுமையான தகவல்கள் எல்லாம் https://enmannenmakkal.com/ என்னும் இணையதளத்தில் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அவர்களின் சொத்து மற்றும் அதன் மதிப்புகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். “தற்போது வெளியிட்டுள்ளது முதல் பாதி மட்டுமே.விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும்.” என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.,

 

Author